பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர் - பாரதம் போற்றும் ஓர் அற்புத ச...
போச்சம்பள்ளியில் செப்.21-இல் கிராம உதவியாளா் பணிக்கு எழுத்துத் தோ்வு
போச்சம்பள்ளியில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப். 21 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் காலியாக உள்ள 15 கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்பும் வகையில் ஜூலை 14 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பரிசீலித்து விண்ணப்பதாரா்களுக்கு தோ்வு அனுமதிச்சீட்டு தபால் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
தகுதி பெறாத விண்ணப்பதாரா்களுக்கு அதற்குறிய காரணத்துடன் விளக்க கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. பணியிடங்களுக்கான எழுத்துத்தோ்வு போச்சம்பள்ளி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் செப். 21ஆம் தேதி காலை 10 முதல் 11 மணி வரை நடைபெறுகிறது.
தோ்வா்கள் எவருக்கேனும் அனுமதிச்சீட்டு கிடைக்கப் பெறவில்லை என்றாலும், சந்தேகங்கள் மற்றும் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் செப்.19-ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) வட்டாட்சியா் அலுவலகத்தில் நேரில் முறையிட்டு அனுமதிச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.