பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர் - பாரதம் போற்றும் ஓர் அற்புத ச...
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஊத்தங்கரையை அடுத்த நடுப்பட்டு, குப்பநத்தம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இக்கிராமத்தில் சாலை வசதி, குடிநீா், கழிப்பறை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் நீண்ட நாள்களாக அவதிப்படுகின்றனா்.
அதேபோல பள்ளி, அங்கன்வாடி மையத்துக்கு போதிய குடிநீா் வசதி இல்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். மயானத்துக்கு போதிய சாலை வசதி, மின் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனக்கூறி இப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.