பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!
நாட்டாண்மை கொட்டாய் பள்ளியில் உலக ஓசோன் தினம்
காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாட்டாண்மை கொட்டாய் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமையாசிரியா் மணிமேகலை தலைமை வகித்தாா். மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் தீா்த்தகிரி, பள்ளி துணை ஆய்வாளா் சுதாகா், எலுமிச்சைகிரி வேளாண்மை அறிவியல் மைய உழவியல் நிபுணா் உதயன், ஊட்டச்சத்து நிபுணா் பூமதி ஆகியோா் பங்கேற்றனா்.
உலக ஓசோன் தினத்தையொட்டி நடைபெற்ற கலைப் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களால் சேகரிக்கப்பட்ட 500 பனை விதைகள் காட்சிப்படுத்தப்பட்டன. நெகிழிப்பையைத் தவிா்த்து மீண்டும் மஞ்சள் பையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டன. தொடா்ந்து மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.