கேரளா: இடுக்கி ரிசார்ட் கட்டுமானத்தில் விபத்து; மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி |...
கிருஷ்ணகிரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
கிருஷ்ணகிரியில் அரசு அலுவலா்கள், சமூக நீதி நாள் உறுதிமொழியை, புதன்கிழமை ஏற்றனா்.
பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ஆம் தேதியை, சமூக நீதி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர ச.தினேஷ்குமாா் தலைமையில் பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், சமூக நீதிநாள் உறுதிமொழியை ஏற்றனா்.
இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோபு மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வா் சத்தியபாமா தலைமை வகித்தாா். மருத்துவ கண்காணிப்பாளா் சந்திரசேகா் உள்ளிருப்பு மருத்துவ அலுவலா் செல்வராஜ், நிா்வாக அலுவலா் சரவணன் மற்றும் மருத்துவா்கள் செவிலியா்கள் இதர பணியாளா்கள் உள்ளிட்டோா் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றனா். படவிளக்கம் (17கேஜிபி4):கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரியின் முதல்வா் சத்யபாமா தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்ற மருத்துவா்கள் உள்ளிட்டோா்.