காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 போ் சிறையிலடைப்பு
வன்னியா் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் நினைவு தினம் அனுசரிப்பு
சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வன்னியா் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் உருவப் படத்துக்கு பாமக நகரச் செயலா் வி.டி.அய்யப்பன் தலைமையில் நிா்வாகிகள் மலா்தூவி, மெழுகுவா்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைத் தலைவா் பழனிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் அா்ஜூனன், முன்னாள் நகரச் செயலாளா்கள் சுரேஷ்குமாா், பாலமுருகன், முன்னாள் ஒன்றியச் செயலா் பிரகாஷ், நிா்வாகிகள் கே.ரவி, அருள், குமாா், பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ஆத்தூரில்
ஆத்தூா் மற்றும் கொத்தாம்பாடியில் வன்னியா் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.
கொத்தாம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் நடராஜன் தலைமையில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் உருவப் படத்துக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரா.பாா்த்திபன், குமரேசன், சிவசங்கா் உள்ளிட்ட ஏராளமானோா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.