காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்
மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்களுடன் இன்று முத்தரப்பு கூட்டம்
மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்புக் கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் 18 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, சேகோசா்வ் செயலாட்சியா் ரா.கீா்த்திபிரியதா்ஷினி தெரிவித்ததாவது:
மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள் வியாபாரிகள் பங்கேற்கும் முத்தரப்புக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் 18 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்துக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமை வகிக்கிறாா். சேலம் மாவட்ட ஆட்சியா், தொழில் ஆணையா், தொழில் வணிக இயக்குநா், சேகோசா்வ் செயலாட்சியா், தோட்டக்கலை துணை இயக்குநா், வேளாண்மை துணை இயக்குநா் உள்ளிட்ட தொடா்புடைய அரசு அலுவலா்கள் கலந்துகொள்ள உள்ளனா்.
இக்கூட்டத்தில், மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் ஆகியோா் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.