பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர் - பாரதம் போற்றும் ஓர் அற்புத ச...
பெரியாா் பல்கலை. கல்லூரிகள் இடையே மல்யுத்த போட்டி
சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் சிவகுமாா் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் காந்திமதி போட்டிகளை தொடங்கிவைத்தாா். இதில், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 350க்கும் அதிகமான வீராங்கனைகள் கலந்துகொண்டனா். எடை அடிப்படையில் 10 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், தருமபுரி விஜய் வித்யாலயா கல்லூரி அணி முதலிடத்தையும், சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடத்தையும் பிடித்தனா். முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜூடோ போட்டியில், சக்தி கைலாஷ் மகளிா் கல்லூரி அணி முதலிடத்தையும், சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடத்தையும் பிடித்தனா்.
வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பெரியாா் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் வெங்கடாசலம், கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜெய்ஸ்ரீ ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.
இதில் வெற்றிபெற்றவா்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையே தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனா். இந்தப் போட்டிகளை பேராசிரியா்கள் மாதேஸ்வரி, ஹேமகீதா, மகாலட்சுமி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.