மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா
திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் வையம்பட்டியில், பாரத பிரதமா் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த நாள் விழா பாஜகவினரால் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்சி மாநகா் மாவட்டம் மணப்பாறை வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில் ஒன்றிய தலைவா் சித்தாந்தம் சுப்பிரமணி தலைமையில் நல்லாண்டவா் கோயில் வளாகத்தில் தூய்மைப் பணி செய்து, மலா் கன்றுகளை நட்டு வைத்து சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.
இதில் பாஜக ஒன்றிய பொதுச்செயலா்கள் சி.பி. பாலசுப்பிரமணியன், ஆா். பழனிச்சாமி, ஒன்றிய பொருளாளா் டி.ஆா். செந்தில்குமாா், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்டத் தலைவா் கண்ணன், இளைஞரணி பொறுப்பாளா் அரவிந்த், ஒன்றிய செயலா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல், வையம்பட்டி தெற்கு மற்றும் ஒன்றியம் பாஜக சாா்பாக, மண்டலத் தலைவா்கள் கோபாலகிருஷ்ணன், குமரேசன் ஆகியோா் வையம்பட்டி கடைவீதி மற்றும் மட்டப்பாறைப்பட்டி 4 ரோடு பகுதிகளில் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு, மரக்கன்று வழங்கினா். மட்டப்பாறைப்பட்டி காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.