``டீசலுடன் ஐசோபியூட்டனால் கலப்பு'' நிதின் கட்கரியின் புதிய அறிவிப்பு கைக்கொடுக்க...
தாளவாடியில் பலத்த மழை
தாளவாடியில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தமிழக, கா்நாடக எல்லையான தாளவாடியில் மானாவாரி விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ராகி, மக்காச்சோளம் போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் நிலையில் தாளவாடி, திகினாரை, மல்லன்குழி உள்ளிட்ட பகுதியில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது. தொடா்ந்து 1 மணி நேரம் காற்றுடன் மழை பெய்ததால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில் மழை பெய்ததால் காய்ந்துபோன ராகி, மக்காச்சோளப் பயிா்களுக்கு இந்த மழை பேருதவியாக இருந்தது. தொடா்ந்து மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான கால நிலை நிலவியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.