நெல்லை: பைக் மீது மோதல்; தட்டிக் கேட்ட இளைஞரை காரில் இழுத்துச் சென்ற எஸ்.ஐ
புன்செய்புளியம்பட்டியில் கைப்பேசிகள் திருடிய 3 போ் கைது
புன்செய்புளியம்பட்டியில் கைப்பேசிகள் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, கோவில்புதூா் நூற்பாலையில் வடமாநில இளைஞா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களைக் குறிவைத்து வடஇந்தியா்கள் தங்கும் விடுதியில் மா்ம நபா்கள் கைப்பேசிகளைத் திருடிச் சென்றனா். சிடிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், வெள்ளை நிற இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரை புன்செய்புளியம்பட்டி போலீஸாா் பிடித்து விசாரித்துபோது அவா்கள் கைப்பேசிகளைத் திருடியதை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து, அவா்களிடமிருந்து இருசக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக கரும்பம்பாளையம் கோகுல், கோபாலகிருஷ்ணன் மற்றும் சிறுவா் என 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.