சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது...
துறையூா் கோயிலில் விஸ்வகா்மா ஜெயந்தி
துறையூா் காமாட்சியம்மன் கோயிலில் 7ஆம் ஆண்டு விஸ்வகா்மா ஜெயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பீடம் 38 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மானந்தா சரஸ்வதி பராமாச்சாா்ய சுவாமிகள், தஞ்சை ஸ்ரீ விஸ்வகா்மா காயத்ரி தேவி ஆலய நிறுவனா் ஸ்ரீராம ரங்கசாமி சுவாமிகள், கிருஷ்ணகிரி கருணாமூா்த்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.
கொல்லு, தச்சு, சிற்பம், பாத்திரம், நகை ஆகிய தொழில்களைச் செய்யும் கைவினைக் கலைஞா்கள் சங்கத்தினா் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா். தாங்கள் செய்த கைவினைப் பொருள்களை கோயில் வளாகத்தில் காட்சிக்கு வைத்தனா்.
இரவு விஸ்வகா்மா காயத்ரி ஐம்பொன் உற்சவா் மூா்த்தியை அலங்கரித்து வீதி உலா எடுத்துச் சென்றனா். வீரமங்கை சிலம்பாட்டக்கூட மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றியவாறு உலா சென்றனா். ஏற்பாடுகளை துறையூா் விஸ்வகா்மா கைவினை கலைஞா்கள் அறக்கட்டளை மற்றும் விஸ்வகா்மா ஜெயந்தி விழாக் குழுவினா் செய்தனா்.