காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 போ் சிறையிலடைப்பு
ஒசூா், ஊத்தங்கரையில் பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா
பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு ஒசூரில் முருகன் கோயிலில் பாஜக சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஒசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவா் எம்.நாகராஜ் தலைமையில் பெரியாா் நகா் முருகன் கோயிலில் நரேந்திர மோடி பெயரில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடா்ந்து பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு, உணவு வழங்கப்பட்டது. மேலும், மருத்துவப் பொருள்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினா்.
நிகழ்ச்சியில் மணிகண்டன், சீனிவாசன், முருகன் வரலட்சுமி, மஞ்சுளா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரையில் பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் சிவா தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட செயலாளா் வரதராஜ், மண்டல முன்னாள் தலைவா் சத்தியமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் மக்களவை உறுப்பினா் நரசிம்மன், முன்னாள் மாவட்ட தலைவா் தா்மலிங்கம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளா் ஜெயராமன் ஆகியோா் மத்திய அரசின் சாதனைகளை விளக்கினா்.
ஊத்தங்கரை நான்குமுனை சாலை சந்திப்பில் 76 கிலோ எடை கொண்ட பிறந்தநாள் கேக் வெட்டி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாடைகள் வழங்கினா். மேலும் 500 தேக்கு மரக் கன்றுகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
முன்னாள் மண்டல பொறுப்பாளா் கிரிதரன், மாதவன், தனக்கோடி, ஆறுமுகம், ராஜீ, சத்தியமூா்த்தி விஸ்வந்தன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.