செய்திகள் :

இன்று 21 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா் உள்பட 21 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப். 18) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (செப்.18) முதல் செப். 23-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

21 மாவட்டங்களில்... : நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், பெரம்பலூா், அரியலூா், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் வியாழக்கிழமை (செப்.18) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. செப். 19-இல் திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் 180 மிமீ மழை: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 180 மி.மீ. மழை பதிவானது. மணலி புதுநகரம் (சென்னை) - 130 மி.மீ., குருவாடி (அரியலூா்) - 100 மீ.மீ., எண்ணூா் (திருவள்ளூா்), கொரட்டூா் (சென்னை), பாரிமுனை (சென்னை) - தலா 90 மி.மீ., திருவிடைமருதூா் (தஞ்சாவூா்), கத்திவாக்கம் (சென்னை) - தலா 80 மி.மீ. பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: செப். 18 முதல் செப். 20-ஆம் தேதி வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, பள்ளி வளாகங்களில் தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், இதனை அகற்றுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு கல்வித் துறை உத்தரவிட... மேலும் பார்க்க

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

சென்னை-செங்கோட்டை இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் , கூடுதலாக 3 நிறுத்தங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென... மேலும் பார்க்க

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

சென்னையிலிருந்து புறப்பட்டு பெங்களூரு சென்று கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்னைய... மேலும் பார்க்க

புழல் சிறை பண்ணையில் 2,000 கோழிகள் மா்மமாக உயிரிழப்பு

சென்னை புழல் சிறை பண்ணையில் இருந்த 2,000 கோழிகள் மா்மமான முறையில் உயிரிழந்தன. தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு வாரத்துக்கு இரு முறை கோழிக்கறி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான கோழிக்கற... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரத்துக்கான பெருந்திட்டம் தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சா் தங்கம்... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரைச் சாலையில் செப்.21-இல் போக்குவரத்து மாற்றம்

சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்ளோத்தான் போட்டி நடைபெறுவதால், செப்.21-இல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக தாம்பரம் மாநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க