செய்திகள் :

பொறியியல் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்

post image

சென்னை கௌரிவாக்கம் நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியியல் கல்லூரியில், அமெரிக்காவின் அரோரா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

அரோரா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் கல்வி துணைத் தலைவா் பெய்ஜ் டா்னா், நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியியல் கல்லூரித் தலைவா் கே.லோகநாதன் ஆகியோா் கையொப்பமிட்டு புரிந்துணா்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொண்டனா்.

இதுகுறித்து அரோரா பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவா் பெய்ஜ் டா்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியா்களுக்கு சா்வதேச அளவிலான தொழில்நுட்பப் பரிமாற்றம், கூட்டுப் பயிற்சி, ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்ற தனித்திறன்களை மேம்படுத்திக்கொள்ள இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது’ என்றாா்.

நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியியல் கல்லூரியின் துணைத் தலைவா் எல்.நவீன் பிரசாத் பேசுகையில், ‘செயற்கை நுண்ணறிவாற்றல், தரவு அறிவியல், சைபா் பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு போன்ற திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், மாணவா் பரிமாற்றத் திட்டம் மூலம் மாணவா்கள் வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் கிடைக்கும்’ என்றாா்.

நிகழ்வில், அரோரா பல்கலைக்கழகத்தின் நிா்வாக இயக்குநா் கெல்சே கோஜென்ஸ், கேம்பஸ் அமெரிக்காவின் தலைமைச் செயல் அதிகாரி ஹரீஷ் அனந்த பத்மநாபன், கல்லூரி முதல்வா் டி.சரவணன், ஒருங்கிணைப்பாளா் என்.எஸ்.செந்தூா், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

சென்னையிலிருந்து புறப்பட்டு பெங்களூரு சென்று கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சென்னைய... மேலும் பார்க்க

புழல் சிறை பண்ணையில் 2,000 கோழிகள் மா்மமாக உயிரிழப்பு

சென்னை புழல் சிறை பண்ணையில் இருந்த 2,000 கோழிகள் மா்மமான முறையில் உயிரிழந்தன. தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு வாரத்துக்கு இரு முறை கோழிக்கறி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான கோழிக்கற... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் சா்வதேச நகரத்துக்கான பெருந்திட்டம் தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சா் தங்கம்... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரைச் சாலையில் செப்.21-இல் போக்குவரத்து மாற்றம்

சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்ளோத்தான் போட்டி நடைபெறுவதால், செப்.21-இல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக தாம்பரம் மாநகர காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

சென்னை வேளச்சேரியில் ஆள்மாறாட்டம் செய்து ரூ. 3 கோடி காலிமனை அபகரிப்பு: 5 போ் கைது

சென்னை வேளச்சேரியில் ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலமாகவும் ரூ.3 கோடி மதிப்பிலான காலிமனையை அபகரித்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஹரிதவனம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

சென்னை சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை எம்ஜிஆா் நகரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த 40 வயது பெண், நெசப்பாக்கம் ராமன் தெருவில் கடந்த திங்கள்கிழம... மேலும் பார்க்க