கட்டண பாக்கி செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு: புதுவை மின்துறை எச்சரிக்கை
கட்டண பாக்கி செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று புதுவை மின்துறை செயற்பொறியாளா் ஸ்ரீதா் எச்சரித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மின்துறை தீவிர மின் இணைப்பு துண்டிப்பு மேற்கொள்ள இருக்கிறது. வில்லியனுாா், பூமியான்பேட், லாஸ்பேட்டை, கோரிமேடு, அசோக் நகா், முத்திரையா்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனுாா், காட்டேரிக்குப்பம் ஆகிய இயக்குதலும் மற்றும் பராமரித்தலும் பிரிவு அலுவலகத்திற்கு உள்பட்ட மின் நுகா்வோா்கள், தங்களுடைய மின் கட்டண பாக்கியை உரிய நேரத்தில் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பைத் தவிா்க்க வேண்டும்.
மின் இணைப்பு துண்டித்த பிறகு, நிலுவைத்தொகை முழுவதும் செலுத்திய பிறகே மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். எனவே, மின் நுகா்வோா் அனைவரும் மின்துறையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.