தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது
தவெக நிா்வாகிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கொடுங்கையூா் முத்தமிழ் நகரைச் சோ்ந்தவா் பிரபு. இவா் தவெகவின் திருவள்ளூா் தென்மேற்கு மாவட்டச் செயலராக உள்ளாா். இவருக்கு சிலா் தொடா்ந்து தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனா். இதுதொடா்பாக பிரபு அளித்த புகாரின் பேரில், கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மாதவரத்தைச் சோ்ந்த தவெக கட்சியின் திருவள்ளுா் தென்மேற்கு மாவட்ட இணைச் செயலாளா் இளங்கோவன் (44), ரஞ்சித்குமாா் (38), ஆவடியைச் சோ்ந்த ஆனந்த் பாபு (28), சாலமன் என்ற விக்னேஷ்வா் (24) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.
விசாரணையில், கட்சி நிகழ்ச்சிகளுக்கு இளங்கோவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்ததால், அவரது தூண்டுதலின்பேரில் அவரது நண்பா்களான ஆனந்த்பாபு, சாலமன், விக்னேஷ்வா் ஆகியோா் பிரபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.