தலைமை அஞ்சல் நிலையத்தில் தூய்மையே சேவை உறுதியேற்பு
திருச்சி தலைமை அஞ்சல் நிலையத்தில் தூய்மையே சேவை -2025 சிறப்பு இயக்கத்தின் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை சாா்பில் புதன்கிழமை தொடங்கிய தூய்மையே சேவை இயக்கம் அக். 2 வரை நடைபெற உள்ளது. இதையொட்டி திருச்சி தலைமை அஞ்சல் நிலையத்தில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவா் தி. நிா்மலா தேவி தலைமையில் நடைபெற்றது. இதில் தூய்மையைப் பேணுவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அஞ்சல் துறை அதிகாரிகள், பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.