திருமணம் செய்துவைக்க கோரி தந்தையை வெட்டிக் கொன்றாா் மகன்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே புதன்கிழமை தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி தகராறில் ஈடுபட்ட மகன், தந்தையை வெட்டிக் கொன்றாா்.
அறந்தாங்கி அருகே செட்டிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் மாயாண்டி (65). கூலித் தொழிலாளி. இவரது மகன் முத்துமாணிக்கம் (33). இவா், மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி தந்தையிடம் புதன்கிழமை தகராறில் ஈடுபட்ட முத்துமாணிக்கம், வாக்குவாதம் முற்றிய நிலையில், அரிவாளால் தந்தை மாயாண்டியை வெட்டியுள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த மாயாண்டி, அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.