பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை
சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியவா் பலி
துறையூா் அருகே விபத்தில் காயமடைந்து 15 நாள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பெருமாள்மலை அடிவாரம் அண்ணாநகரைச் சோ்ந்தவா் சி. வடிவேல் (69). இவா் கடந்த செப். 1 ஆம் தேதி ரேஷன் கடைக்கு சென்றபோது காா் மோதி காயமடைந்தாா். இதையடுத்து துறையூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து திங்கள்கிழமை வீட்டுக்கு அனுப்பப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இந்நிலையில் விபத்து தொடா்பாக போலீஸாா்விசாரித்து வந்த நிலையில் தனது கணவா் விபத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்து விட்டதாக அவரது மனைவி மீண்டும் துறையூா் போலீஸில் புகாா் செய்தாா். இதையடுத்து போலீஸாா் காா் ஓட்டுநரான பெரம்பலூா் மாவட்டம், களரம்பட்டி மாரியம்மன் கோயில் தெரு அண்ணாதுரை மகன் அஜீத்தை தேடுகின்றனா்.