செய்திகள் :

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

post image

நாடு முழுவதும் இருந்து வந்த பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.

மக்கள் தன் மீது கொண்டுள்ள அன்பும் நம்பிக்கையும் தனது வலிமையின் ஆதாரங்கள் எனக் குறிப்பிட்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது,

''எண்ணிலடங்கா வாழ்த்துகளும் என் மீது கொண்ட அன்பும் நம்பிக்கையும் எனது வலிமையின் ஆதாரங்களாக உள்ளன. இதனை, அவர்கள் எனக்கு வழங்கும் ஆசிகளாக மட்டுமின்றி, சிறந்த இந்தியாவை உருவாக்கப் பாடுபடும் நமது முயற்சிகளுக்கு வழங்கும் ஆசிகளாக அவற்றைப் பார்க்கிறேன். கூடுதல் ஆற்றலுடனும் பக்தியுடனும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று உறுதியேற்கிறேன். இதன்மூலம் மட்டுமே வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்க முடியும். உங்கள் வாழ்த்துகளுக்கு தனித்தனியாக என்னால் பதிலளிக்க முடியவில்லை. ஆனால், மறுபடியும் சொல்கிறேன், இந்த அன்பு என் இதயத்திற்கு நெருக்கமாகிவிட்டது. அனைவரின் ஆரோக்கியத்திற்காகவும் உடல் நலனுக்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் தொண்டர்கள் மேற்கொண்ட சமூக சேவைகளைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ள அவர், ''நாடு முழுவதும் பரவலான மக்கள் சமூக சேவைகளைத் தொடங்கியுள்ளீர்கள். பெரும்பாலானோர் இதனை வரும் நாள்களிலும் தொடர வேண்டும். மக்களிடையே உள்ள இத்தகைய நற்பண்பு, எத்தகைய சவால்களில் இருந்தும் நம்பிக்கையுடனும் நேர்மறை எண்ணங்களுடனும் மீண்டு வருவதற்கு உதவியாக இருக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

Source of great strength PM Modi overwhelmed with innumerable birthday wishes

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை(செப். 18) காலை செய்தியாளர்களுடன் பேசுகிறார். இந்தத் தகவலை காங்கிரஸ் தலைமை இன்றிரவு வெளியிட்டுள்ளது.Tomorrow 18 Sept, Special Press Briefing by the Lead... மேலும் பார்க்க

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில், பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகள் காவல் துறையின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பரேலியில் உள்ள பிரபல பாலிவுட் நடிகை... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில், 12 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் இன்று (செப்.17) சரண்டைந்துள்ளனர். நாராயணப்பூர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 12... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் கடம்ப மரக் கன்று ஒன்றை பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்.17) பாஜக ஆளும் மா... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசி வாயிலாக, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின், 75 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (செப்.17), பாஜக ஆளும் மாந... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில், வெள்ளத்தில் தனது சைக்கிள் சேதமானதற்கு அழுத 6 வயது சிறுவனுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதிய சைக்கிளை பரிசளித்துள்ளார். பஞ்சாபில் வெள்ளத... மேலும் பார்க்க