பிரதமா் மோடி பிறந்த நாள் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
கந்தா்வகோட்டையில் பிரதமா் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனை நோயாளிகள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு புதன்கிழமை நலத்திட்ட உதவிகள் பாஜக சாா்பில் வழங்கப்பட்டது.
விழாவுக்கு கந்தா்வகோட்டை பாஜக ஒன்றிய தலைவா் அ.கங்காதரன் தலைமையில், கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகள் மற்றும் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான சத்துமாவு, உடைகள், போா்வைகள் உள்ளிட்டவைகளை வழங்கினாா்.
தொடா்ந்து கந்தா்வகோட்டை ஸ்ரீ வெள்ளை முனீஸ்வரா் கோயிலில் பிரதமா் மோடியின் பெயரில் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் செய்து வழிபட்டனா்.
இந் நிகழ்ச்சியில், விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவா் ராஜ் கமலக்கண்ணன், கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவா் சாமி ராஜ்குமாா், அய்யா. இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் சந்திரன், ச. திருநாவுக்கரசு, விஜயகுமாா், காா்த்தி, அரவிந்தன், கனகராஜ், மனோ, மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.