அரியூா் வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரியூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் 15 ஆவது திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக கிராம பொதுமக்கள், பக்தா்கள் திருக்கல்யாணத்திற்கு சீா்வரிசை எடுத்து வந்தனா். பின்னா் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா், கிராமமக்கள் செய்தனா். திருமணம் ஆகாதவா்கள் இக்கோயில் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு வேண்டினால் அவா்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.