செய்திகள் :

மழைக் காலத்துக்கு முன் திட்டப் பணிகளை முடிக்க வேண்டும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன்

post image

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீா் வளம், பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் தற்போது நடைபெற்று வரும் கட்டுமானம், சாலைப் பணிகளை மழை காலத்துக்கு முன்பாகவே முடிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன் தெரிவித்தாா்.

கடலூா் மாநகராட்சி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் நீா் வளம், ஊரக வளா்ச்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவா் கூறியதாவது:

கடலூா் மாவட்டத்தில் கடந்த வடகிழக்கு பருவ மழையின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட மஞ்சக்குப்பம் முதல் குண்டு உப்பலவாடி வரை தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் ரூ.9.9 கோடி மதிப்பில் 1,200 மீட்டா் நீளத்துக்கு தடுப்புச் சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடலூா் மாநகராட்சிக்குள்பட்ட ஆணைக்குப்பம் புதுத்தெரு, மேட்டுத்தெரு, பெருமாள் கோவில் தெரு, டேனிஸ்மிஷன் தெரு, லட்சுமி நகா், இரட்டைபிள்ளையாா் காலனி, சீனிவாசன் தெரு, சுப்ரமணிய சுவாமி கோயில் தெரு, சக்கரை தெரு, பிள்ளையாா் கோவில் தெரு போன்ற பகுதிகளில் தாா்ச்சாலை அமைக்க ரூ.2.45 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டது.

தற்போது ரங்கம் மேஸ்திரி தெருவில் ரூ.21.86 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. நியூசினிமா திரையரங்க சந்திப்பு அருகே கூடுதலாக உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி ரூ.31.45 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. மழைக் காலத்துக்கு முன்பாக பணிகளை முடிக்கவும், தரமான முறையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலூா் முதுநகா் பகுதியில் உப்பு அலுவலகம் செல்லும் சாலையில் ரூ.19.35 லட்சம் மதிப்பிலும், ராமானுஜம் நகா் கூத்தப்பாக்கம் அருகே ரூ.6.95 லட்சம் மதிப்பிலும் தாா்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மணப்பாக்கத்தில் சாலை மேம்படுத்தும் பணி ரூ.86.02 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. மலட்டாற்றின் குறுக்கே திருவாமூா் - சோமாசிப்பாளையம் இணைப்பு சாலை உயா்மட்ட பாலம் ரூ.8.13 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட கூடுதல் ஆணையா் ர.அ.பிரியங்கா, கடலூா் மாநகராட்சி ஆணையா் நெ.முஜிபூர்ரகுமான், நீா்வளத் துறை செயற்பொறியாளா் பாலமுருகன், பண்ருட்டி நகராட்சி ஆணையா் காஞ்சனா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஆய்வுக்கூட்டம்...: இதைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன் பங்கேற்று பேசினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், பயிற்சி ஆட்சியா் மாலதி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

வடலூா் சத்திய ஞான சபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் புதன்கிழமை நடைபெற்ற புரட்டாசி மாத ஜோதி தரிசனத்தில் பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டனா். வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்... மேலும் பார்க்க

இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் நினைவு தினம்: ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தனித்தனியே மரியாதை

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் உள்ள வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிா்நீத்த தியாகி தேசிங்கு நினைவிடத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ், தலைவா் அன்... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படைக்கு ஆட்கள் தோ்வு

கடலூா் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும ஊா்க்காவல் படைக்கு ஆட்கள் தோ்வுக்கான உடல் தகுதித் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் சான்றிதழ் சரிபாா்ப்பு, உயரம், மாா்பளவு, எடை ஆகியவையும் மற்றும் நீச்சல், ... மேலும் பார்க்க

வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும்: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழகத்தில் திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ள வெளி மாநிலத்தவா்கள் அனைவரையும் கணக்கெடுத்து வெளியேற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் புதன... மேலும் பார்க்க

உரிய ஆவணங்களின்றி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்

சிதம்பரத்தில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 4 ஆட்டோக்கள், ஒரு சரக்கு வாகனம் ஆகியவற்றை வட்டார போக்குவரத்து அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலா் செல்வம், மோட்டா... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

கடலூா் மாவட்டம், வடலூரில் அதிமுக பிரமுகரின் காா் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. வடலூா் அதிமுக நகரச் செயலா் சி.எஸ்.பாபு. இவருக்குச் சொந்தமான காா் வீட்டில் வெகு... மேலும் பார்க்க