Bigg Boss Tamil 9: மாமியார் மருமகள், சர்ச்சை யூ டியூபர்; இந்த சீசனின் போட்டியாள...
ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த தமிழன்..! 20 போட்டிகளில் சாதித்த வருண் சக்கரவர்த்தி!
இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக நம்.1 இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்கு இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
வருண் சக்கரவர்த்தி மொத்தமாக 121 டி20 கிரிக்கெட் போட்டிகளில் 157 விக்கெட்டுகளை குவித்துள்ளார்.
குறிப்பாக, 20 சர்வதேச டி20 போட்டிகளில் 35 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
34 வயதாகும் வருண் சக்கரவர்த்தி கடந்த 2021-இல் இந்தியாவுக்கு டி20 போட்டிகளில் விளையாட தொடங்கினார்.
இந்தாண்டு முழுவதும் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி முதல்முறையாக நம்.1 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.