செய்திகள் :

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

post image

இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்வ் வெற்றிபெற்றது.

ஆட்டத்துக்கு முன்னதாக, டாஸ்ஸின் போதும், போட்டி முடிந்தும் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பாகிஸ்தான் அணியினருடன் கை குலுக்காமல் தவிர்த்தனர்.

பாகிஸ்தான் அணியினருடன் கை குலுக்காமல் தவிர்த்த விவகாரம் பூதாகரமான நிலையில், இந்த விவகாரத்தில் நடுவர் ஆண்டி பைகிராஃப்ட்டை(ஜிம்பாப்வே) நீக்க வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர் மீது குற்றம் சாட்டியிருந்தது.

அவ்வாறு நீக்காவிட்டால் ஆசிய கோப்பை போட்டியிலிருந்து விலகும் யோசனையில் பாகிஸ்தான் வாரியம் இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ஐசிசியும் பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தது.

ஒருவேளை பாகிஸ்தான் அணி போட்டியில் இருந்து விலக முடிவு செய்திருந்தால், இந்த நடவடிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு 16 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும்.

இந்த நிலையில், குரூப் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் பாகிஸ்தான் அணி இன்று (செப்.17) மோதும் நிலையில், அந்த ஆட்டத்துக்கான பிரதான நடுவரான ஆண்டி பைகிராஃப்ட், போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போட்டி நடுவரான ஆண்டி பைக்ராஃப்ட்டுக்கு பதிலாக ரிச்சி ரிச்சர்ட்சன் போட்டி நடுவராக நியமிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தகவலறிந்த நபர் ஒருவர் தெரிவித்தார்.

Andy Pycroft removed from all Pakistan matches in Asia Cup after middle ground reached with ICC: PCB insider

இதையும் படிக்க : இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! - பிரிடோரியா வீரர் பிரேவிஸ்

சொந்த மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளதாக பிரிடோரியா கேபிடல்ஸ் அணி வீரர் டெவால்டு பிரேவிஸ் தெரிவித்துள்ளார்.தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 நான்காவது தொடருக்கான ஏலம் சில நாள்களுக்கு முன்னதாக நடைபெற்... மேலும் பார்க்க

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

இந்தியாவில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நடுவா்கள் குழுவிலிருந்து ஆண்டி பைகிராஃப்டை நீக்க வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கையை, சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செவ்வாய்க்கிழமை நிரா... மேலும் பார்க்க

வங்கதேசத்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? 155 ரன்கள் இலக்கு!

ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 155 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் பேட்டிங்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.... மேலும் பார்க்க

ஒருவர் சதம், இருவர் அரைசதம்: முதல் நாளில் ஆஸி. ஏ அணி 337 ரன்கள் குவிப்பு!

இந்தியா ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி முதல் நாளில் 5 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்துள்ளது.ஆஸ்திரேலியா ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இர... மேலும் பார்க்க