செய்திகள் :

ரோபோ சங்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

post image

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். மிமிக்ரி கலைஞரான இவர் தீபாவளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின், நீண்ட இடைவெளிக்குப் பின் ’மாரி’ படத்தின் மூலம் பெரிய வரவேற்புக் கிடைத்தது. தொடர்ந்து, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் பேசப்படும் நடிப்பை வழங்கினார்.

தற்போது, சில படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு தீவிர மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர் உடல் எடை இழந்து மோசமான நிலைக்குச் சென்றார். ஆனால், சிகிச்சை காரணமாக நோயிலிருந்து மீண்டு, பழைய தோற்றத்திற்கு மாறினார்.

இந்த நிலையில், ரோபோ சங்கருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் நலத்திற்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. விரைவில், மருத்துவர்கள் தரப்பிலிருந்து கூறப்படலாம் எனத் தெரிகிறது.

actor robo shankar admitted in hospital due to health issues

கண்மணி அன்னதான விருந்து - நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!

நடிகர் ராகவா லாரன்ஸ் அன்னதானச் சேவையைத் தொடங்கியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் திரைத்துறை நடிப்பைத் தாண்டி வசதி இல்லாதவர்களுக்கு பல்வேறு சேவைகளையும் உதவிகளையும் செய்து வருகிறார்.அந்த வகையில், தற்போது க... மேலும் பார்க்க

கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?

கழிப்பறையில் ஹேண்ட் டிரையர் எனும் கை உலர்த்திகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கழிப்பறையில் கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கள் நிறைய இருப்பதால் கழிப்பறைகளைப் பயன்படுத்திய பிறக... மேலும் பார்க்க

அதிவேகம், குறைந்த வயதில் 880 கோல்கள்..! மெஸ்ஸி புதிய சாதனை!

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அதிவேகமாக 880 கோல்களை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார். இன்டர் மியாமி அணிக்காக இன்று அதிகாலை நடந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ம... மேலும் பார்க்க

புதிய தொடரில் நடிக்கும் பாரதி கண்ணம்மா வினுஷா!

நடிகை வினுஷா தேவி புதிய தொடரில் நடிக்கவுள்ளார். பாரதி கண்ணம்மா தொடரைப் போன்றே இந்தத் தொடரிலும் பெண் குழந்தைக்குத் தாயாகவே நடிக்கவுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நடித்... மேலும் பார்க்க

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

வசந்த் ரவி நடிப்பில் வெளியான இந்திரா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தரமணி, ராக்கி, ஜெயிலர் படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகரான வசந்த் ரவியின் இந்திரா திரைப்படம், கடந்த மாத... மேலும் பார்க்க

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

நடிகை செளந்தர்யா தனது காதலனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கேக் வெட்டும் நிகழ்ச்சியின்போது காதலனிடம் அவர் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர்... மேலும் பார்க்க