அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!
இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிவேகமாக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மந்தனா இந்த சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
34 ஓவர்களில் இந்திய மகளிரணி 198/4 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா 91 பந்துகளுக்கு 117 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.
77 பந்துகளில் சதம் அடித்தார். இந்தியாவுக்காக அதிவேகமாக சதமடித்தவர்கள் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா முதலிடத்தில் இருக்கிறார்.
ஆனால், இந்தமுறை இரண்டாவது இடத்தையும் அவரே பிடித்துள்ளார்.
அதிவேக ஒருநாள் சதமடித்த இந்திய வீராங்கனைகள்
1. ஸ்மிருதி மந்தனா - 70 பந்துகள் (அயர்லாந்துக்கு எதிராக, 2025)
2. ஸ்மிருதி மந்தனா - 77 பந்துகள் (ஆஸி.க்கு எதிராக, 2025)
3. ஹர்மன்ப்ரீத் கௌர் - 82 பந்துகள் (இங்கி. எதிராக, 2025)
4. ஹர்மன்ப்ரீத் கௌர் - 87 பந்துகள் (தெ.ஆ. எதிராக, 2024)
5. ஜெமிமா ரோட்ரிக் - 89 பந்துகள் (இலங்கைக்கு எதிராக, 2025)
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஸ்மிருதி மந்தனாவின் மூன்றாவது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், ஒருநாள் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் மந்தனா நான்காவது இடத்தில் நீடிப்பதும் குறிப்பிடத்தக்கது.