பஞ்சாப் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு அழுத சிறுவன்.. ராகுல் காந்தி அளித்த பரிசு!
கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!
ரெட்ட தல திரைப்படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது.
அருண் விஜய்யின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரலில் பூஜையுடன் தொடங்கியது. கிரிஸ் திருக்குமரன் இயக்கிய இப்படத்திற்கு, ’ரெட்ட தல’ எனப் பெயரிட்டுள்ளனர். அண்மையில், இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் சித்தி இத்னானி, தன்யா, பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் அருண் விஜய், இப்படத்தில் இரட்டை வேடத்தில் 4 தோற்றங்களில் நடித்துள்ளதாகவும் இப்படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கண்ணம்மா எனப் பெயரிட்ட இப்படத்தின் முதல் பாடல் அப்டேட்டை விடியோவாக வெளியிட்டுள்ளனர். சாம் சிஎஸ் எழுதி, இசையமைத்துள்ள இப்பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். இது, விரைவில் வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!