செய்திகள் :

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

post image

ஷபானா நடிக்கும் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடி, நகைச்சுவை, காதல் உள்ளிட்டவை அடங்கிய தொடராக போலீஸ் போலீஸ் இணையத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. நடிகை ஷபானா செம்பருத்தி, மிஸ்டர் மனைவி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர்.

போலீஸ் போலீஸ் இணையத் தொடரில் பிரதான பாத்திரங்களில் மிர்ச்சி செந்தில், ஜெயசீலன் தங்கவேல் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் ஷபானா, சுஜிதா, வின்செண்ட் ராய், சத்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

காவல் நிலையத்தில் போலீஸ் - திருடன் இடையே நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி நகைச்சுவைக் கலந்து இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னோட்டக் காட்சியின் மூலம் தெரிகிறது.

இந்த நிலையில், போலீஸ் போலீஸ் இணையத் தொடர் வரும் செப். 19 ஆம் தேதி ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.

முன்னதாக, ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியான ஹார்ட் பீட் இணையத் தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து, தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வரும் நிலையில், போலீஸ் போலீஸ் இணையத் தொடரும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

The release date of the web series Police Police, starring Mirchi Senthil and Jayaseelan Thangavel, has been announced.

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

வசந்த் ரவி நடிப்பில் வெளியான இந்திரா திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தரமணி, ராக்கி, ஜெயிலர் படங்களின் மூலம் கவனம் பெற்ற நடிகரான வசந்த் ரவியின் இந்திரா திரைப்படம், கடந்த மாத... மேலும் பார்க்க

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

நடிகை செளந்தர்யா தனது காதலனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கேக் வெட்டும் நிகழ்ச்சியின்போது காதலனிடம் அவர் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர்... மேலும் பார்க்க

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

இன்டர் மியாமி அணி சியாட்டல் சௌண்டர்ஸ் அணியை 3-1 என வீழ்த்தியது. லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்த அணியிடம்தான் இன்டர் மியாமி 0-3 என தோற்றது குறிப்பிடத்தக்கது. லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த... மேலும் பார்க்க

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

ரெட்ட தல திரைப்படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது. அருண் விஜய்யின் 36-வது படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரலில் பூஜையுடன் தொடங்கியது. கிரிஸ் திருக்குமரன் இயக்கிய இப்படத்திற்கு,... மேலும் பார்க்க

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

நடிகர் விடிவி கணேஷ் ஆவேசமாகப் பேசிய விடியோ வைரலாகியுள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ். இப்படத்தின் வெற்றிக்குப் பின் விடிவி கணேஷாக மாறினார். தொடர்ந்து, தமிழின... மேலும் பார்க்க

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

விஜய் விருதுகள் விழா மேடையில் அருண் பிரசாத் - அர்ச்சனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.பிக் பாஸ் பிரபலங்களான அருண் பிரசாத், அர்ச்சனா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் வ... மேலும் பார்க்க