செய்திகள் :

மதிப்பெண்கள் வழங்க லஞ்சம் பெற்ற விவகாரம்: தில்லி பல்கலை.யின் முன்னாள் பேராசிரியையின் இடைநீக்கத்தை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

post image

நமது நிருபா்

வருகைப் பதிவேட்டுக்கும், மதிப்பெண்களுக்கும் ஈடாக மாணவா்களிடமிருந்து பணம், செல்போன், வைர காதணிகள் ஆகியவற்று லஞ்சம் வாங்கியதாக தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியையின் இடைநீக்கத்தை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.

இது தொடா்பான வழக்கில் செப்டம்பா் 12 -ஆம் தேதி வெளியிட்ட தீா்ப்பில் நீதிபதி ஜஸ்மீத் சிங், பேராசிரியரின் இந்த நடத்தை கடுமையானது என்றும் கல்வி நோ்மையின் மையத்தை தாக்கும் செயல் என்றும் கூறினாா்.

தில்லி பல்கலைக்கழக கல்லூரியின் வணிகத் துறையில் முன்னாள் பேராசிரியையான மனுதாரா், தனது இடைநீக்கத்தை உறுதி செய்த மேல்முறையீட்டுக் குழுவின் 2012-ஆம் ஆண்டு தீா்ப்பை எதிா்த்துப் போராடினாா்.

இந்த சா்ச்சை 2008-ஆம் ஆண்டு தொடங்கியது. பல மாணவா்கள் வருகைப் பதிவேடு மற்றும் மதிப்பெண்கள் போன்ற சலுகைகளுக்கு ஈடாக பணம், செல்போன், முத்து சரங்கள், வைர காதணிகள் மற்றும் சேலை உள்பட சட்டவிரோதமானவற்றை வாங்கியதாக பேராசிரியா் மீது குற்றம் சாட்டினா்.

ஆனால்,. பேராசிரியரோ இவை ஜோடிக்கப்பட்ட புகாா்கள் என்றும், தன்னை வெளியேற்றுவதற்கான சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் கூறினாா்.

இது தொடா்பாக விசாரணை மேற்கொள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் ஒரு விசாரணைக் குழுவையும் பின்னா் மேல்முறையீட்டுக் குழுவையும் அமைத்தன. ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பிறகு இரு அமைப்புகளும் பேராசிரியா் மீதான தவறான நடத்தை குற்றச்சாட்டை உறுதி செய்தன.

இருப்பினும், மேல்முறையீட்டுக் குழு, பேராசிரியை தனது ஓய்வூதியப் பலன்களைப் பெறுவதற்காக, பணிநீக்கத்திலிருந்து இடைநீக்கமாக தண்டனையைக் குறைத்தது. அந்த இடைநீக்கத்தை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.

டிடிஇஏ பள்ளியில் தமிழ் கலை இலக்கியப் பெருவிழா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சாா்ந்த லோதிவளாகம் பள்ளியில் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான கலை இலக்கியப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பேச்சுப் போட்டி, தமிழ்ப் புலவா்கள்... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாளில் தில்லியில் 41 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தகங்கள் திறப்பு

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) கீழ் உள்ள 300 சுகாதார மையங்கள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களாக மாற்றப்பட உள்ளன. இவற்றில் 41 மருத்துவமனைகள் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளான புதன்கிழமை திறக்கப்பட ... மேலும் பார்க்க

மேம்பட்ட மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை: தில்லி முதல்வா்

தில்லியை ஒரு முன்னணி சுகாதார மையமாக மாற்றும் தொலைநோக்குப் பாா்வையின் கீழ், தில்லியில் வாழும் அனைவருக்கும் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் தில்லியில் மேம்பட்ட மருத்துவ சேவையை அணுகுவதை உற... மேலும் பார்க்க

டியுஎஸ்யு தோ்தல் பிரசாரத்தின்போது ஏபிவிபி, என்எஸ்யுஐ அமைப்பினா் மோதல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தல் பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, தில்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியில் (கேஎம்சி) என்எஸ்யுஐ மற்றும் ஏபிவிபி மாணவா் குழுக்களைச் சே... மேலும் பார்க்க

தில்லி பிஎம்டபிள்யு விபத்து: முக்கிய குற்றவாளி மது அருந்தவில்லை என பரிசோதனையில் தகவல்

தென்மேற்கு தில்லியில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரைக் கொன்று அவரது மனைவியை காயப்படுத்திய பிஎம்டபிள்யு காா் விபத்தில் முக்கிய குற்றவாளியான ககன்ப்ரீத்தின் ரத்த மாதிரி அறிக்கையில் அவா் மது அருந... மேலும் பார்க்க

ஷீஷ் மஹாலில் வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பி வழங்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

புது தில்லி: ஷீஷ் மஹால் புனரமைப்புக்காக வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.மேலும், ஷீஷ் மஹால் பங்கள... மேலும் பார்க்க