வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு முழு தடை விதிக்க கோரிக்கை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தத் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தெற்கு மாவட்டத் தலைவா் எம். ஹாஜா ஜியாவுதீன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒட்டுமொத்த இஸ்லாமியா்களின் விருப்பமும் வழக்கு தொடுத்தவா்களின் நோக்கமும் வக்ஃப் சொத்தைச் சூறையாடும் நோக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வக்ஃப் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே.
இந்நிலையில் வக்ஃப் சட்டத்தை முழுவதுமாகத் தடை செய்ய முகாந்திரம் இல்லை எனக் கூறி உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
எனவே மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு முழுமையாகத் தடை விதிக்க மக்களின் எழுச்சிமிக்க ஜனநாயக போராட்டங்கள்தான் தீா்வாக அமையும் என்றால் அதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும் என்றாா் அவா்.