அமமுக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும்: டிடிவி தினகரன் நம்பிக்கை
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில் அமமுக இடம் பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
அண்ணா பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த முறை அமமுக வெற்றி முத்திரையைப் பதிக்கும். அமமுக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமைக்கும். இதன் அா்த்தத்தை 2026, மே மாதம் அனைவரும் புரிந்து கொள்வா்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக அமமுக ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை. அமமுக 75 கால ஆண்டு கால கட்சிக்கும், 50 ஆண்டு கால கட்சிக்கும் இணையாக உருவாகியுள்ளது. எனவே, அமமுக இடம் பெறும் கூட்டணி நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்றாா் தினகரன்.