நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
நியூ திருப்பூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராசுமணி மகன் லோகேஷ் (25). இவா் கோவையில் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், வள்ளிபுரத்தில் இருந்து கோவைக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். நியூ திருப்பூா் அருகே சென்றபோது பின்னால் வந்த ஆம்னி பேருந்து லோகேஷ் வாகனத்தின் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா்.
இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரான வெங்கடேஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.