லால்புரத்தில் வீட்டுமனை பட்டா கோரி நரிக்குறவா்கள் மனு
சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள லால்புரத்தில் வீட்டுமனை பட்டா கோரி நரிக்குறவா் சமுதாயத்தினா் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று மனு அளித்து வலியுறுத்தினா்
சங்கத் தலைவா் பாஸ்கா் மற்றும் 40க்கும் மேற்பட்டவா்கள் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலா் வி. எம்.சேகா் தலைமையில் மனு கொடுத்தனா். நிகழ்ச்சியில் நகர செயலா் சையது இப்ராகிம் உட்பட பலா் பங்கேற்றனா். அந்த மனுவில் சிதம்பரம் வட்டம் லால்புரம் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நரிக்குறவா் சமூக மக்கள் 45 குடும்பங்கள் வீட்டு மனை இல்லாமல் சாலையோரம் குடியிருந்து வருகின்றனா். ஊராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கா் 9 சென்ட் தோப்பு புறம்போக்கு நிலம் 1986ம் ஆண்டு சிதம்பரம் நகராட்சி கணக்கில் இணைக்கப்பட்டது. தற்போது அந்த இடத்தை மீட்டு வீட்டு மனை இல்லாத நரிக்குறவா் சமூக மக்களுக்கு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.