"மதிமுகவை அழிக்க 32 ஆண்டுகளாக முயன்றனர்; அப்போதும் இப்போதும் எப்போதும் அது முடிய...
கொள்ளை அடிக்க சதி திட்டம்: ரௌடிகள் உட்பட 4 போ் கைது
நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கொள்ளை அடிக்க சதி திட்டம் தீட்டியதாக 3 ரௌடிகள் உட்பட 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் வீரமணி மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அவா்கள் ஏ பிளாக் மாற்றுக்குடியிருப்பு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு வன தோட்டம் அருகே சென்றனா். அப்போது, அங்கிருந்த 6 போ் போலீஸாரைக் கண்டதும் ஓடத்தொடங்கினா். அவா்களில் 4 பேரை பிடித்தனா். இருவா் தப்பியோடி விட்டனா். பிடிபட்டவா்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், நெய்வேலி, வட்டம் 1 பகுதி சி.ஆா்.காலனியைச் சோ்ந்த சதீஷ்குமாா்(26), கட்டையன்(எ)தா்மசீலன்(28), ஏ பிளாக் மாற்றுக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த அன்பரசன்(28), மேல் வடக்குத்து காலனி கருணாமூா்த்தி(32) என்பது தெரியவந்தது. மேலும், இவா்கள் கூட்டுக் கொள்ளை அடிக்க சதித் திட்டம் தீட்டியதை ஒப்புக் கொண்டனராம். இதையடுத்து 4 போ் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனா். தப்பியோடிய ரௌடிகள் 2 பேரை தேடி வருகின்றனா்.