அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி
ரூ.3.53 லட்சம் இறப்பு நிவாரண நிதி: கடலூா் ஆட்சியா் வழங்கினாா்
நெய்வேலி: கடலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தினருக்கு ரூ.3.53 லட்சம் இறப்பு நிவாரண உதவித்தொகைக்கான காசோலையை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தல்குமாா் வழங்கினாா்.
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமாா் 700-க்கும் மேற்பட்டோா் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக மனு அளிக்க வந்திருந்தனா். அந்தவகையில், திங்கள்கிழமை பொதுமக்கள் இடமிருந்து 527 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
நலஉதவிகள்:
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 1 பயனாளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் விபத்து மரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை மற்றும் 9 பயனாளிகளுக்கு தலா ரூ.17,000 வீதம் மொத்தம் ரூ.1,53,000 மதிப்பில் இயற்கை மரணம் மற்றும்ஈமசடங்கு உதவித்தொகை என மொத்தம் 10 மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு ரூ.3.53 லட்சம் இறப்பு நிவாரண உதவித் தொகைக்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாற்றுத்திறனாளி நல அலுவலா் பாலசுந்தா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.