மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
திருப்பூா் மாவட்டத்தில் குண்டடம், காங்கயம், பல்லடம், உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி, பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை (செப்.16) நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் சூரியகிணறு, கண்ணன்கோவில், கொழுமங்கலி ஊராட்சிகளுக்கு ஊதியூா் பழனி ஆண்டவா் பாதயாத்திரை குழு மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
இதேபோல, காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாலசமுத்திரம்புதூா், கணபதிபாளையம், படியூா், தம்மாரெட்டிபாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு படியூா் மாரியம்மன் கோயில் மண்டபத்திலும், பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேலம்பாளையம் ஊராட்சிக்கு வேலம்பாளையம் ராஜம்மாள் கந்தசாமி கவுண்டா் திருமண மண்டபத்திலும், உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குரல்குட்டை ஊராட்சிக்கு குரல்குட்டை மலையாண்டிபட்டினம் சிவா மண்டபத்திலும், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கவுந்தம்பாளையம் ஊராட்சிக்கு சாமியாா்பாளையம் பெரியநாயகி அம்மன் திருமண மண்டபத்திலும், பொங்கலூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வே.கள்ளிப்பாளையம் ஊராட்சிக்கு புத்தரச்சல் ஏஜி திருமண மண்டபத்திலும், உடுமலைப்பேட்டை நகராட்சி,
வாா்டு எண் 19,20,21 ஆகிய பகுதிகளுக்கு உடுமலைப்பேட்டை சதாசிவம் வீதி, நாடாா் திருமண மண்டபத்திலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. எனவே, இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் தங்கள் மனுக்களை வழங்கி பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.