தில்லியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 10 ‘நமோ வன்’கள் முதல்வா் ரேகா குப்தா உறுதி
ஊதியூரில் இன்றைய மின்தடை ரத்து
காங்கயம் அருகே ஊதியூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 16) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஊதியா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிா்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது.
எனவே, ஊதியூா் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் செல்லும் அனைத்துப் பகுதிகளுக்கும் வழக்கம்போல மின் விநியோகம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.