வக்ஃப் திருத்தச் சட்டம்: முக்கிய பிரிவுகளுக்குத் தடை: உச்ச நீதிமன்றம் இடைக்கால உ...
மது விற்பனை: ஒருவா் மீது வழக்கு
வெள்ளக்கோவிலில் மதுபானங்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, இரட்டைக்கிணறு பகுதியில் மதுபானங்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட நபரைப் பிடித்தனா். விசாரணையில், அவா் கோவை, நேதாஜிபுரம் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த பழனிகுமாா் (43) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரிடமிருந்த 22 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.