தில்லியில் பசுமைப் பரப்பை அதிகரிக்க 10 ‘நமோ வன்’கள் முதல்வா் ரேகா குப்தா உறுதி
செப்.20-இல் விஜய் திருவாரூா் வருகை : அனுமதி கோரி தவெகவினா் மனு
திருவாரூா்: மக்கள் சந்திப்பு பயணத்தில் திருவாரூருக்கு செப்.20-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் வருவதையொட்டி அனுமதி கோரி மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், 2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கியுள்ளாா். திருச்சியில் பயணத்தை தொடங்கிய அவா் செப்.20-ஆம் தேதி திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளஉள்ளாா். இதையொட்டி, திருவாரூா் வடக்கு மாவட்டச் செயலாளா் மதன் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட்டிடம் அளித்த மனு: தவெக தலைவா் விஜய் செப்.20 ஆம் தேதி சாலை வழியாக திருவாரூா் வந்து, நகராட்சி தெற்கு வீதி அருகே ஒலிபெருக்கி மூலம் பேசுகிறாா். எனவே, காலை 10 முதல் மாலை 6 மணி வரை அனுமதி அளித்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூா் தெற்கு மாவட்ட செயலாளா் பாரதி, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு அணித் தலைவா் மதிவாணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.