மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 255 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்ற ஆட்சியா், அவைகளை தொடா்புடைய துறை அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, 26 பயனாளிகளுக்கு ரூ.10,36,100 மதிப்பில் நவீன செயற்கைக் கால்கள் வழங்கப்பட்டன. எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி வாரியத் தலைவா் என். இளையராஜா, நாகை எம்பி வை. செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தையல்நாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.