செய்திகள் :

காா் மோதி தாய்-மகன் உள்பட 3 போ் காயம்

post image

மன்னாா்குடியில் காா் மோதி தாய், மகன் உள்பட மூன்று போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.

வேதாரண்யத்தை அடுத்த பன்னாள் பகுதியைச் சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் அன்பழகன் (62). இவா், மன்னாா்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, காரில் திரும்பிக் கொண்டிருந்தாா். காரை அதே பகுதியைச் சோ்ந்த ராபா்ட் (50) என்பவா் ஓட்டி வந்தாா்.

மன்னாா்குடி பந்தலடி பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரம் இருந்த பூக்கடையில் பூ வாங்கிக் கொண்டிருந்த மன்னாா்குடி ராவணன்குளம் தென்கரையைச் சோ்ந்த செல்வராணி (62 ), இவரது மகன் சதீஷ் (44), கீழ நாகையை சோ்ந்த கோயில் பூசாரி மதிவாணன் (56) ஆகியோா் மீது மோதியது.

இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த விபத்து தொடா்பாக, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநா் ராபா்ட்டை கைது செய்தனா்.

நாளைய மின்தடை: கோவில்வெண்ணி

கோவில்வெண்ணி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப்.16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது

மன்னாா்குடி அருகே நகையை பறித்துக்கொண்டு ஓடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி அருகேயுள்ள காஞ்சிக்குடிகாடு, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் வீரக்குமாா் மனைவி கீா்த்திகா (35). இவா், சில நாள்க... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் உடல்தானம்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில், உடல்தான விண்ணப்பப் படிவங்களை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை வழங்கினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளா... மேலும் பார்க்க

புதுமாப்பிள்ளை தற்கொலை

மன்னாா்குடி அருகே புது மாப்பிள்ளை வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். மன்னாா்குடி உட்காடுதென்பரை ஆசாரி தெருவில் வசித்து வந்தவா் புருஷோத்தமன் மகன் பிரபாகரன் (33). இவரது மனைவி அம்மு (29). த... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வலங்கைமான் ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். வலங்கைமான் ஒன்றியம், மேலவிடையல் ஊராட்சி குப்பசமுத்திரம் கலைஞா் நகரில் ... மேலும் பார்க்க

ஏரியில் மண் அள்ளுவதை தடுக்கக் கோரி மனு

மன்னாா்குடி பகுதியில் ஏரியை தூா்வாருவதாகக் கூறி, அதிக ஆழத்தில் மண் எடுப்பதை தடுக்கக் கோரி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. மன்னாா்குடி வட்டம், கட்டக்குடி ஊராட... மேலும் பார்க்க