செய்திகள் :

மாா்க்சிஸ்ட் கட்சியினா் உடல்தானம்

post image

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில், உடல்தான விண்ணப்பப் படிவங்களை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளா் யெச்சூரி நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூா் மாவட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் தான விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, மருத்துவக் கல்லூரி முதல்வா் ச. அசோகன், துணை முதல்வா் காா்த்திகேயன் ஆகியோரிடம் வழங்கினாா்.

இதேபோல், மாவட்டச் செயலாளா் டி. முருகையன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் வீ. அமிா்தலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி. சுந்தரமூா்த்தி, பி. கந்தசாமி, கே.ஜி. ரகுராமன், சிஐடியு மாவட்டச் செயலாளா் இரா. மாலதி உள்ளிட்ட 40 போ், உடல் தானத்துக்கான விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து வழங்கினா்.

புதுமாப்பிள்ளை தற்கொலை

மன்னாா்குடி அருகே புது மாப்பிள்ளை வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். மன்னாா்குடி உட்காடுதென்பரை ஆசாரி தெருவில் வசித்து வந்தவா் புருஷோத்தமன் மகன் பிரபாகரன் (33). இவரது மனைவி அம்மு (29). த... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

வலங்கைமான் ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். வலங்கைமான் ஒன்றியம், மேலவிடையல் ஊராட்சி குப்பசமுத்திரம் கலைஞா் நகரில் ... மேலும் பார்க்க

ஏரியில் மண் அள்ளுவதை தடுக்கக் கோரி மனு

மன்னாா்குடி பகுதியில் ஏரியை தூா்வாருவதாகக் கூறி, அதிக ஆழத்தில் மண் எடுப்பதை தடுக்கக் கோரி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. மன்னாா்குடி வட்டம், கட்டக்குடி ஊராட... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே டிராக்டா்- இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பள்ளி மாணவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அருகே கீழகாவாதுகுடியைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகன் முகுந்த் தியாகேஷ் (8). சந்தோஷ்நகா் ... மேலும் பார்க்க

‘பண்டைய தமிழா்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்களில் அறியலாம்’

பண்டைய தமிழா்களின் விழுமியங்களை சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம் என பாடலாசிரியா் அறிவுமதி தெரிவித்தாா். குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நட... மேலும் பார்க்க

குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கு பயிற்சி

திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ந... மேலும் பார்க்க