மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
வலங்கைமான் ஒன்றியப் பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
வலங்கைமான் ஒன்றியம், மேலவிடையல் ஊராட்சி குப்பசமுத்திரம் கலைஞா் நகரில் தலா ரூ.2.40 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் நான்கு பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகளையும், கீழவிடையல் ஊராட்சி மாதா கோயில் தெருவில் தலா ரூ.2.40 லட்சத்தில் கட்டப்படும் மூன்று பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகளையும் மாவட்ட
ஆட்சியா் நேரில் பாா்வையிட்டாா்.
ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முரளி, ரமணி, உதவி பொறியாளா் சுகந்தி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், பணி மேற்பாா்வையாளா்கள் பிரபாகரன், முருகையன், ஊராட்சி செயலா்கள் சுரேந்திரன், கோபிநாத் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.