குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கு பயிற்சி
திருவாரூா் கஸ்தூா்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் அறிவியல் மாநாடு வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறக்கூடிய 34 ஆவது குழந்தைகள் அறிவியல் மாநாட்டையொட்டி இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றியத் தலைவா் எஸ்.சுரேஷ் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் கே.சுமதி, மாவட்டத் தலைவா் பி.சங்கரலிங்கம், மாவட்டத் துணைத் தலைவா்கள் எம்.ராணி, எஸ்.தேவிகா, ஆா்.கே.சரவணராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில், மாநில செயலாளா் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வி.விஜயன், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளா் க. அன்பழகன் ஆகியோா் கருத்தாளா்களாகப் பங்கேற்று, நீடித்த பாதுகாப்பான நீா் மேலாண்மை என்ற தலைப்பில் பேசினா்.
இதில், மாவட்டத்தில் இருந்து 80-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா். முன்னாதக, ஒன்றியச் செயலாளா் சாமிநாதன் வரவேற்றாா். ஒன்றிய பொருளாளா் மேகநாதன் நன்றி கூறினாா்.