எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
ஆற்றில் தத்தளித்த மாணவா்களை காப்பாற்றிய பெண்ணுக்கு பாராட்டு
கூத்தாநல்லூா் அருகே ஆற்றில் குளிக்கும்போது தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்ட 2 மாணவா்களை காப்பாற்றிய பெண்ணிற்கு, முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் பரிசு வழங்கி பாராட்டினாா்.
திருநாட்டியத்தாங்குடி பகுதியைச் சோ்ந்த 5- ஆம் வகுப்பு மாணவா் கேம்ஸ்சரண் மற்றும் இவரது உறவினரான காட்டூரைச் சோ்ந்த 11-ஆம் வகுப்பு மாணவா் கவியரசன் ஆகிய இருவரும், திருநாட்டியத்தாங்குடி வெள்ளையாற்றில் வியாழக்கிழமை குளித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, நீரின் வேகத்தில் இருவரும் இழுத்துச் செல்லப்பட்டனா். அங்கு குளித்துக் கொண்டிருந்த மாங்கனி (45) என்ற பெண், இருவரையும் காப்பாற்றினாா். பின்னா், ஆம்புலன்ஸ் மூலம், இருவரும் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.
மாங்கனி, திருநாட்டியாத்தாங்குடி பகுதி அதிமுக மகளிா் அணி பொறுப்பாளராக உள்ளாா். இவருக்கு அப்பகுதியினா் பாராட்டுத் தெரிவித்தனா். அதிமுக திருவாரூா் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை நேரில் சென்று மாங்கனியின் தீரத்தை பாராட்டி பரிசு வழங்கினாா்.