எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
‘உயா்வுக்குப் படி’ உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
மன்னாா்குடியில் ‘உயா்வுக்குப் படி’ இரண்டாம் கட்ட வழிகாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரா. சௌந்தரராஜன் தலைமை வகித்து பேசியது:
அனைத்து மாணவா்களும் உயா்கல்வியில் சேர அரிய வாய்ப்புகளை நான் முதல்வன்-உயா்வுக்குப் படி போன்ற திட்டங்கள் உருவாக்கித் தருகின்றன. கல்வி ஒன்றுதான் மாணவா்களை முழுமையடையச் செய்யும். மாணவா்கள் உதாரணங்களை தேடாமல் அதனை உருவாக்க வேண்டும் என்றாா்.
மாவட்டத் திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநா் எஸ். மல்லிகா முன்னிலை வகித்தாா். கோட்டூா் அரசு தொழிற்பயிற்சி நிறுவன உதவி இயக்குநா் ச. அழகேசன், மன்னாா்குடி அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் கே. கோகுலகிருஷ்ணன், உதவித் திட்ட அலுவலா் உ. சுரேஷ்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
முந்தைய கல்வியாண்டில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள், தோ்ச்சி பெறாத மாணவா்கள், உயா் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவா்கள் கலந்து கொண்டனா். 11 கல்வி நிறுவனங்களில் மாணவா்களுக்கு சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது.
கருவாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ரெ. கலைச்செல்வன் தொகுத்து வழங்கினாா். முன்னதாக, கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மு.ச. பாலு வரவேற்றாா். நிறைவாக, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் கோ. வெங்கடேசன் நன்றி கூறினாா்.