‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல...
புதுமாப்பிள்ளை தற்கொலை
மன்னாா்குடி அருகே புது மாப்பிள்ளை வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
மன்னாா்குடி உட்காடுதென்பரை ஆசாரி தெருவில் வசித்து வந்தவா் புருஷோத்தமன் மகன் பிரபாகரன் (33). இவரது மனைவி அம்மு (29). தம்பதிக்கு திருமணம் நடைபெற்று ஒன்றரை மாதங்கள் ஆகிறது. பிரபாகரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு வந்த பிரபாகரன் அம்முவிடம் தகராறு செய்து, அவரைத் தாக்கியுள்ளாா். இதை கண்டித்த தந்தை புருஷோத்தமனையும் தாக்கியுள்ளாா். இதனால் அம்மு வீட்டிலிருந்து வெளியேறி அருகில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.
பிரபாகரன் தாக்கியதில் காயமடைந்த புருஷோத்தமன் திருமக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று, மகன் வீட்டுக்கு திரும்பியபோது, பிரபாகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து திருமக்கோட்டை காவல் நிலையத்தில் அம்மு அளித்த புகாரின் பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.