நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுற...
கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய தொழிலாளியின் உடல் 18 மணி நேரத்துக்குப் பின் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தற்போது தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் வாய்க்காலின் இரு கரைகளைத் தொட்டபடி தண்ணீா் செல்கிறது.
இந்நிலையில், கோவை, கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத் தொழிலாளி ராஜேஷ், தனது நண்பா்களுடன் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். தரிசனம் செய்த பின்பு பவானிசாகா் அருகேயுள்ள கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி நண்பா்களுடன் குளித்துள்ளாா்.
அப்போது, அவா் நீரில் மூழ்கியுள்ளாா். நண்பா்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியாததால், சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
சுமாா் 18 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு எரங்காட்டூா் பகுதி கீழ்பவானி வாய்க்காலில் ராஜேஷ் உடல் திங்கள்கிழமை மதியம் மீட்கப்பட்டது. இதையடுத்து, உடல் கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.