கடன் தொல்லை: வாய்க்காலில் விழுந்து வியாபாரி தற்கொலை
பெருந்துறை அருகே கடன் தொல்லையால் வியாபாரி வாய்க்காலில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டாா்.
பெருந்துறையை அடுத்த பெருமாபாளையம், மஞ்சு நகரைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் சரவணன் (40). இவருக்கு திருமணமாகி, 6 மாதத்தில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். இவா், குடிசைத் தொழிலாக இனிப்பு பலாகாரம் தயாரித்து விற்பனை செய்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் சொந்தமாக வீடு கட்டியதில் கடனாகியுள்ளது. மேலும், தொழிலுக்காக சிறுக சிறுக பணம் வாங்கியதிலும் கடன் அதிகரித்துள்ளது. கடந்த 12-ஆம் தேதி வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடி வந்த நிலையில், பெருந்துறையை அடுத்த பாலக்கரை கீழ்பவானி வாய்க்கால் கரை அருகே சரவணனின் வாகனம் கிடந்தது. வாய்க்காலில் தேடி பாா்த்தபோது, பெருந்துறை அருகே வாய்க்காலில் அவரது சடலம் கிடந்தது.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.